ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களுடைய கட்சி – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்

(துறையூர் தாஸன் )
அரசியல் இப்போது தடுமாறியிருக்கின்றது,தளம்பியிருக்கின்றது தடம்புரண்டு இருக்கின்றதென்றெல்லாம் பல கோணங்களில் பல பார்வைகள் இருக்கின்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர்களுக்கு சில ஆதங்கங்கள் இருக்கின்றன.அவர்களது ஆதங்கங்கள் உண்மைதான்.அது அவர்களின் உணர்வு பூர்வமான இருப்புமாகும் என ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் தெரிவித்தார்.
மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கில் ,விசேட தேவையுடையோருக்கான வளப்படுத்தல் நிலையம் ஹியுமன் லின்கின் பத்து வருட நிறைவை முன்னிட்டு விசேட தேவையுடையோருக்கான விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,கட்சி தடுமாறியிருக்கின்றது தடுக்கியிருக்கின்றது பிரள்வுபட்டு இருக்கின்றது என்றெல்லாம் ஒவ்வொரு சொற்களை
அடுக்கிக்கொண்டு செல்லலாம் இருந்தாலும் இந்த கட்சி முஸ்லிம்களுடைய கட்சி.இந்த கட்சியை, கட்சிக்குள் இருந்து எவரும் வெளியே செல்லலாமே தவிர இந்த கட்சிக்கு உரித்துடையவர்கள் சொந்தக்காரர்கள் வளர இருக்கின்ற இளைஞர்களும் சிறார்களுமாகும்.எனவே அந்த இளைஞர்களும் சிறார்களும் இந்த கட்சியை பாதுகாக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள்.முஸ்லிம்களினுடைய கட்சியை, முஸ்லிம்கள்தான் தடம்புரளாமல் பார்த்துக்கொண்டு விசுவாசமாக இருக்க வேண்டும். கட்சியின் தலைவர் அன்புக்குரிய ரவூப் ஹக்கீம் அவர்களின் நாடு நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இரண்டு கோடி செலவில், விசேட தேவையுடையோருக்கான ஆராதனை மண்டபம் ஒன்றை அமைத்துத் தருவதாகவும் இதன்போது உறுதியளித்திருந்தார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!