இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து கல்முனையில்ல் ஆர்ப்பாட்ட கண்டப்பேரணி

(துறையூர் தாஸன்)

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலைப் பிரதேசத்தை மீட்பதற்கான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் அமைதிப் பேரணி ஊர்வலம் கல்முனையில், வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றது.

மதிய நேர ஜும்மா தொழுகையின் பின்னரே இவ் எதிர்ப்பு நடவடிக்கை, சிவில் சமூக அமைப்புகளாலும் இளைஞர் அமைப்புகளாலும் மற்றும் பொது மக்களாலும் மேற்க்கொள்ளப்பட்டது.

பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில் புத்தர் சிலையை வைக்காதே! ,அரசே முஸ்லிம்களின் நிலங்களை சுரண்டாதே,நல்லாட்சியை ஏற்படுத்தியதற்கு கைமாறாக காவி உடை பயங்கவரவாதத்தை தடுத்து நிறுத்து,முஸ்லிம் மக்களின் காணிகளைஅபகரிக்க என்றும் நினைக்காதே என்ற கோஷங்களுடனும் சுலேகங்கள் பொறிக்கப்பட்ட பாதாதைகளுடனும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அமைதிப் பேரணி ஊர்வலம் கல்முனைப் பிரதேச செயலகம் வரை சென்று கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான பறக்கதுள்ளா,சமாதான நீதவான் நிசார் ஆகியோர் அமைதிப் பேரணி ஊர்வத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!