இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து சம்மாந்துறை நகரில் ஆர்ப்பாட்ட கண்டப்பேரணி

(எம்.சி. அன்சார்)

இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லிமலைப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பெளத்த விஹாரை அமைக்க மேற்கொண்டுவரும் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து சம்மாந்துறை பொதுநல அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களினால் வெள்ளிக்கிழமை(28) சம்மாந்துறை நகரில்  ஆர்ப்பாட்ட கண்டப்பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை பத்ர் ஜூம் பள்ளியிலிருந்து ஹிஜ்ரா சந்திவரை இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

“ஜனாதிபதியோ நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகளே, எங்களை அமைதியாக வாழ விடுங்கள்”, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரே புத்தரின் பெயரில் எங்களின் காணியை அபகரிக்காதே”, புத்தரின் பெயரில் காணி அபகரிப்பா”, “முஸ்லிம்களின் காணிகளை அபகரிப்பதுதான் நல்லாட்சி அரசாங்கமா”, ஒரு சிங்கள குடிமகனும் வாழ இடத்தில் எதற்கு பௌத்த விகாரை”, ஜனாதிபதியே மாயக்கல்லி மலையில் விஹாரை அமைக்கும் முயற்சியை நிறுத்த நடவடிக்கை எடுக்கள்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!