மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கல்முனை பற்றிமா தேசிய பாடசாலைக்கு அருகாமையில்,வேக கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மத்தியமுகாம் 11 ஆம் கிராமத்தைச் சேர்ந்த கோ.காளிதாஸ்(வயது – 33) எனபவர் ,இன்று அதிகாலை காரைதீவில் இருந்து துறைநீலாவணை  நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் போது, வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதாக கல்முனை பொலிஸ் ,போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டியின் சாரதி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தீவிர சத்திர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்து பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!