பௌதீக மற்றும் அடிப்படை வசதிகளற்ற தம்பலவத்தை பொது நூலகம்

(துறையூர் தாஸன் )
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச சபைக்கூட்பட்ட தம்பலவத்தை பொது நூலகத்தில் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைவான பாடப் புத்தகங்களும் நிறைவான செய்தித்தாள்களும் இன்மையினால் பிரதேச வாழ் பாடசாலை மாணவர்களும் வாசகர்களும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,2016 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைப் பரீட்சைத்  திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்குரிய புதிய பாடத்திட்டங்களுக்கு அமைவான பாடப்புத்தகங்களும் உயர்தர மாணவர்களுக்குரிய பாடநூல்களும் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாக்களைக் கொண்ட புத்தகங்களும் ஜீனியஸ் பத்திரிகை போன்றனவும் இன்மையினால் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதாக பாடசாலை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் பத்திரிகை வாசிப்பதற்கு ஆர்வமாக வருகின்ற இப்பிராந்திய மக்கள் தங்களுக்குத் தேவையான பத்திரிகைகள் இல்லையெனவும் மூன்று வகையான பத்திரிகைகள் மாத்திரமே காணப்படுவதால் ஏனைய பத்திரிகைகளை வாசிக்க முடியாது ஏமாற்றமடைந்து ஏனைய ஊர், நூலகங்களை நாடிச் செல்கின்றனர்.
மேலும் உசாத்துணை புத்தகங்களை பாதுகாப்பாக வைப்பதற்குரிய பௌதீக வளங்கள் இன்மையினால் இருக்கின்ற நூல்கள் நிலத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக நூலகரும் வாசகர்களும் இதன்போது தெரிவித்தனர்.
மிக விரைவில் நூலகத்திற்கு தேவையான பௌதீக மற்றும் அடிப்படை வசதிகளையும் பெற்றுத்
தருமாறு வாசகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!