நாட்டைப் பிரிக்காமல் அதிகார பகிர்வு; ஐக்கிய தேசிய கட்சி உறுதி

 

[முஹம்மட் உவைஸ்]

நாட்டைப் பிரிக்காமல் தமிழர்களுக்கு நிச்சயம் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி எம்பி நளின்பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

நாட்டின் முக்கிய பல பிரச்சினைகளுக்குத்த் தீர்வாகத்தான் இந்த நல்லாட்சி உதயமானது.இந்த அரசு வந்து இரண்டுவருடங்களில் பலமுக்கிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக,வடக்கு-கிழக்கு தமிழர்களின்பிரச்சினைகளைக் கூறலாம்.

20 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் காணிகள் பலவிடுவிக்கப்பட்டுள்ளன.காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன.அதற்காக அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அரசியல் தீர்வை வழங்குவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.இந்த அரசுஆட்சியை கையேற்றது முதல் அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் இடம்பெருகின்றன.அதற்கு ஏற்பவே புதியஅரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது.

அந்தப் புதிய அரசமைப்பின் ஊடாக வழங்கப்படவுள்ள அரசியல் தீர்வானது ஒருபோதும் நாட்டைப்பிளவுபடுத்தாது.நாட்டை இரண்டாகப் பிரிக்காமலே அதிகாரப் பகிர்வை நாம் வழங்குவோம்.தமிழீழம் ஒன்றைஉருவாக்கும் விதத்தில் அரசியல் தீர்வை வழங்கப் போவதாக மஹிந்த அணியினர் பிரசாரம் செய்துவருகின்றனர்.அதில் எந்த உண்மையும் இல்லை.-என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!