வெல்லாவெளி மண்டூர் பிரதான பாதையில் பிக்கப் ரக வாகனம் விபத்து

(துறையூர் தாஸன்)

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி மண்டூர் பிரதான பாதையில் பிக்கப் ரக வாகனமொன்று, மின் கம்பத்துடன் மோதி பலத்த சேதங்களுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது ,கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பிக்கப் ரக வாகனம் இன்றிரவு(20) 11.00 மணி வேளையில் ,மண்டூர் 01 ஆம் குறிச்சியில் ,அருகிலுள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிய வருகிறது.
வாகனத்தில் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் முன் பாகம் பலத்த சேதங்களுடனும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!