சென்னையில் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கற்கை நிலையம் 23ஆம் திகதி  ஆரம்பம்: இலங்கை சார்பில் ஆலோசகராக என்.எம். அமீன் நியமனம்

 

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

சென்னை காயிதே மில்லத் கல்வி சமூக நம்பிக்கை நிதியம் ஆரம்பிக்கும் காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்விக்கான அகடமியின் திறப்பு விழா எதிர்வரும்23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெறும்.

ஆரம்ப நிகழ்வில் மலேசியாவின் வர்த்தக ஆலோசனைக்குழுவின் தலைவர் தாத்தோ முஹம்மது இக்பால் முன்னிலையில் காயிதே மில்லத் கல்வி சமூக நிறுவனத்தின் தலைவர் பத்மபூஷணம் மூஸா ராஸா தலைமையில் நடைபெறும்.

கஸ்தூரி ஸம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீ என் ராம் அங்குரார்ப்பண உரை நிகழ்த்துவார். இந்த நிகழ்வில் நக்கீரன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர். கோபால், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ். ஸாதிக், நவமணிப் பத்திரிகை பிரதம ஆசிரியர் என். எம். அமீன், மஹிந்தா நேயம் அகடமியின் ஸ்தபாகர் எஸ். துரை சாமி, சிரேஷ்ட ஊடகவியலாளர் கனி ஆகியோர் உரையாற்றவுள்ளதோடு, காயிதே மில்லத் சர்வதேச சமூக நம்பிக்கை நிதியத்தின் செயலாளர் எம். ஜீ. தாவூத் மீயாகான் அறிமுக உரை நிகழ்த்தவுள்ளார். இந்த ஊடகக் கல்லூரியின் ஆலோசனைக்குழுவின் தலைவராக  மூஸா ராஸாவும் செயலாளராக எம். ஜீ. தாவூத் மீயாகானும் பணி புரிவதோடு, அங்கத்தவர்களாக மலேசியாவைச் சேர்ந்த தாத்தோ முஹம்மது இக்பால், கலாநிதி வீ. வசந்தா தேவி, கலாநிதி எஸ். ஸாதிக், இலங்கை சார்பாக என். எம். அமீன், ஹைதராபாத் கலாநிதி பகுர்தீன் முஹம்மத் மற்றும் முஹம்மட் கனி, பதுர் ரப்பானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!