விருதோடை அஸீஸிய்யா அரபுக்கல்லூரி நடத்தும் கருத்தரங்கும் பட்டமளிப்பு விழாவும் : அமைச்சர் ராஜித பிரதம அதிதி

 

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

புத்தளம் விருதோடை அல் ஜாமியத்துல் அஸீஸிய்யா அரபுக் கல்லூரி ஏற்பாடு செய்துள்ள சமாதானம் மற்றும் சௌஜன்யம் தொடர்பான மதங்களுக்கிடையிலான கருத்தரங்கும் அல் ஜாமியதுல் அஸீஸிய்யா  பட்டமளிப்பு விழாவும் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 9.30 மணிக்கு விருதோடை அல் ஜாமியதுல் அஸீஸிய்யா  வளாகத்தில் நடைபெறும்.

அல் ஜாமியதுல் அஸீஸிய்யா  அரபுக் கல்லூரியின் தலைவர் மௌலானா குசாலி அல் றிபாய் தலைமையில் நடைபெறும் இந்த வைபவத்தில், சுகாதார சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

கைத்தொழில் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன், தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, தொழில் பயிற்சிகள் ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார,  பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா,  எம்.எச்.எம். நவவி,  முஜிபுர் றஹ்மான்,  எஸ்.எம். மரிக்கார்,  பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் செய்யத் சகில் ஹ{ஸைன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான அசாத் சாலி,  சாஹ{ல் ஹமீத், சவூதி அரேபியத் தூதுவராலய அதிகாரி அஷ்ஷெய்க் அலி அல் உமர்,  அஸ் செய்யத் நகீப்மௌலானா ஆகியோர் கலந்து கொள்வர்.

இந்நிகழ்வில் சவூதி அரேபியாவிலிருந்து கலாநிதி செய்யத் அல் ஹபீப் அபூபக்கர் மசூர் மௌலானா,  அஷ்ஷேக் ஒமர் சாலிம் பஜுஹைம்,  அஷ்ஷேக் அப்துல் பரீத் மையம்,  இந்தியாவிலிருந்து முன்னாள் இந்திய எம்.பீக்களான முஹம்மத் இம்ரான்,  எஸ்.எஸ். சஹாபூ,  கவிமணி தாஜுதீன்,  சிங்கப்பூர் அல் – ஹாஜ் ஜலால்தீன் பாவா ஆகியோரும் விசேட அதிதிகளாகக் கலந்து கொள்வார்கள்.

சிறப்புப் பேச்சாளர்களாக இந்திய உஸ்மானிய அரபுக் கல்லூரியின் பேராசிரியர் தாஜா முஹைதீன், அல் ஆலிம் அல் ஹாபிழ் சதிஹ{த்தீன், அல் ஹாபிழ் மௌலவி எஸ்.எம். ஹ{ஸைன், மௌலவி சலீம் சிராஜு, மௌலவி யூ.எல். அம்ஜத் அலி.

விசேட அதிதிகளாக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் எம்.எம். ஸ{ஹைர், மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.ஜே.எம். பாயிஸ், முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்எ.ம். மலிக், முன்னாள் சவூதி அரேபியத் தூதுவர் ஹ{ஸைன் முஹம்மத், முந்தல் பிரதேச செயலாளர் சி. பிரேமசூரிய, புத்தளம் பிரதேச செயலாளர் டபிள்யூ. வன்னிநாயக்க, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யெஹ்யா ஆப்தீன், வர்த்தகப் பிரமுகர்களான எம்.எம். அஹமத் ரிப்கான், எம்.என்.எம். நபீன், எம்.ஐ.எம். ஆசிக் ஆகியோர் கலந்து கொள்வர்.

பட்டமளிப்பு விழாவின் போது நான்குபேர் அல் ஆலிம் பட்டத்தைப் பெறுவதோடு,  நான்கு பேர் அல் ஹாபிழ் பட்டத்தையும் நான்கு பேர் தலைப்பாகையும் சூட்டப்படவுள்ளனர். நிகழ்வின் முதல்நாள் மாலை கருத்தரங்கில் உள்ளு+ர், வெளியூர் முக்கியஸ்தர்களது உரைகள் இடம்பெறும் என்று விழாவின் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் கலாநிதி மௌலவி அப்துல் காதர் ஹஸ்புல்லா தெரிவித்தார்.

அவர்கள் வருமாறு:

அல்ஆலிம் பட்டம் பெறுவோர், யூ.எல்.எம். முஹம்மது அக்ரம் ஹொரவப்பொத்தானை, ஏ.எம். முஹம்மது ஹிலால் புல்மோட்டை, எஸ்.எம். முஹம்மது நிஷாத் புல்மோட்டை, எஸ்.எச்.ஏ. அப்துஸ்ஸத்தார் புல்மோட்டை.

அல் ஹாபிழ் பட்டம் பெறுவோர்கள் ஏ.ஆர்.எம். முஹம்மது இர்பான் புல்மோட்டை, எச்.எல்.எம். முஹம்மது ஜப்ரான் புல்மோட்டை, எம்.எம். முஹம்மது நாஸிக் சாய்ந்தமருது, எஸ்.எம். முஹம்மது நஜாத் புல்மோட்டை. தலைப்பாகை சூட்டப்படுவோர் எம்.எஸ். முஹம்மது ருஷ்தி சுங்காவில், எஸ்.எம். முஹம்மது ஸாலிரஹீன் மதவாக்குளம், ஏ.பி. முஹம்மது அரூஸ் புல்மோட்டை, எம்.எம். முஹம்மது சதீக் புல்மோட்டை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!