ஆங்கிலேயன், ஆட்சியை தீர்மானிக்கும் பொறுப்பை மக்களின் கைகளில் ஒப்படைத்தானோ அன்றே தொடங்கியது நசல்: எம்.எச்.எம்.இப்றாஹிம் கல்முனை

ஆங்கிலேயன் ஆட்சியை தீர்மானிக்கும் பொறுப்பை சகல பாமர மக்களின் கைகளில் ஒப்படைத்தானோ அன்றே தொடங்கியது நசல்……
* அதன் பிறகு பாமர மக்களின் வாக்குகளை கவருவதற்காக சிங்கள அரசியல்வாதியும், தமிழ் அரசியல் வாதியும் கையில் எடுத்த ஆயுதம்தான் இனவாதம் என்ற ஆயுதம்.
* சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு, தமிழனை எதிரியாய் காட்டுவது., தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு , சிங்களவனை எதிரியாய் காட்டுவது.,இதுதான் அவர்களின் தொழிலாக இருந்தது. இது இரண்டுக்கும் நடுவில் மிதிபட்டு விடாமல் அன்றய நமது முஸ்லிம் அரசியல் வாதிகள் பெரும்பாண்மையோடு சேர்ந்து கொண்டு இனங்கிய அரசியலை செய்தது இதுதான் யாதார்த்த நிலையாகவும் அன்று இருந்தது.

* வண்ணானை முதலை பிடித்த கதையாகத்தான், தமிழ் தலைவர்களை ஏமாற்றிவிட்டு புலிகள் ஆயுதம் ஏந்திய விடயம், அதன் பிறகு குப்புற விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று கூறிக்கொண்டு புலிகளின் ஆயுத போராட்டத்தை ஆதரிப்பது போல் தமிழ் தலைவர்கள் நாடகமாடியது.
 * இந்த இரு சமூகமும் மக்களை உணர்ச்சியூட்டி அரசியலில் காய்நகர்த்தி வெற்றியடைந்து சுகபோகம் அனுபவிப்பதை கண்ட நமது முஸ்லிம் தலைவர்களும் , நாமும் நமது சமூகத்தை உசிப்பேத்தி அவனும் அடிக்கிறான்,இவனும் அடிக்கிறான் என்று கூறிக்கொண்டு முஸ்லிம் மக்களின் மனதில் இனக்குரோதத்தை வளர்த்து  வாக்குகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் சென்றுவிடலாம் என்று திட்டம் போட்டு இனவாதத்தை விதைக்கத் துவங்கினார்கள்.வெற்றியும் கண்டார்கள்.
* ஆக,..மூன்று இன மக்களும் அரசியல் வாதிகளின் சதியில் மாட்டிக்கொண்டு, ஒருவரை ஒருவர் எதிரியாக பார்க்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள். இனி இலங்கையில் மூன்று இன மக்களுக்கும் சந்தேகமில்லாமல் சந்தோசமாக வாழ்வார்கள் என்று நம்புவது பகல் கனவுதான்.
* ஆனால் எந்த இனமாக இருந்தாலும்,  இந்த அரசியல் வாதிகளுக்கு பூமியிலும், மறுமையிலும் நிம்மதியாக வாழ இறைவன் விடமாட்டான், வெளியிலே அவர்கள் நன்றாக வாழ்வது போல்தான் தெறியும், ஆனால் உள்ளுக்குள்ளே அவனுகள் நிம்மதியற்று புழுவாய் துடிப்பதை நாம் அறியமாட்டோம், இந்த வேதனையை அவனும் படைத்த இறைவனும்தான் அறிவான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!