தேசிய காங்கிரஸின் இளைஞர்களுக்கான ஒன்று கூடல்

தேசிய காங்கிரஸின்
இளைஞர்களுக்கான ஒன்று கூடல், தேசிய காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச இளைஞர் அமைப்பாளரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பெரீஸ் எம். பாறூக் தலைமையில் தேசிய காங்கிரஸ் தலைவர்  ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களின் அங்கீகாரத்துடன் நேற்று (15) மாலை 06.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமாகிய எம்.எம் பஹீஜ், தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் இறக்காம பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமாகிய பொறியியலாளர் எஸ்.ஐ மன்சூர், தேசிய காங்கிரஸின் ஆவணவாக்கத்திற்கான உயர்பீட உறுப்பினரும் முன்னால் அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினருமாகிய ஏ.ஜீ அஸ்மி மற்றும் தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி இணைப்பாளர்களுமாகிய எம்.எல்.ஏ மஜீட், எம்.டீ கரீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
இவ் ஒன்றுகூடலில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு கடந்த கால அரசியல் சம்மந்தமான பரிபூரண அறிவு தெளிவு ஏற்படுத்தப்பட்டது. சமகால அரசியல் சம்பந்தமாகவும் தெளிவுகள் ஏற்படுத்தப்பட்டது. சமகால  முஸ்லிம்களின் அரசியல் நகர்வுகள் எதிர்காலத்தில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்தப்போகின்றது என்ற எதிர்வுகூறல்களும் ஒப்பிட்டளவில் தெளிவுபடுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இளைஞர்களினால் அரசியல் ரீதியாக தெளிவடையாத விடயங்களை அவர்கள் தேசிய காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களிடம் கேட்டு தெளிவுகளை பெற்றுக் கொண்டனர் .
இதனைத்தொடர்ந்து MYSDA அமைப்பு ஏ.ஏ.ஏ ஆகிப் அன்சார் தலைமையில் தேசிய காங்கிரஸிற்கு ஆதரவு தர முன்வந்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!