இது நமது உரிமையில்லையா? நல்லாட்சியில் பறிபோன நிலத்தை மீட்குமா உங்கள் உரிமை போராட்டம்??? – National Democratic People’s Alliance.

வாய்கிழிய வார்த்தைக்கு வார்த்தை தலைவர் அஸ்ரப் அவர்களின் பெயரை சொல்லி வாக்கு கேட்பவர்களின் தன்மானத்தை கேள்விக்கட்படுத்தும் விதமாக ஒலுவிலில் இருந்து தீகவாபி செல்லும் பாதையில் இருந்த ஒரேயொரு… More முஸ்லிம் கிராமமான “அஸ்ரப் நகரை” இன்று இராணுவம் கைப்பற்றியிருக்கின்றது.

அங்கு வாழ்ந்த 150 குடும்பங்களுக்கு சொந்தமான சுமார் 600 ஏக்கர் காணிக்கான காணி உத்தரவு  பத்திரங்களை புதிப்பித்து தருகின்றோம் என்று அரசாங்க அதிபர் இட்ட உத்தரவினை ஏற்று முஸ்லிம் பிரதேச செயலாளரும் கிராம சேவகர்களும் அப்பாவி மக்களிடமிருந்த ஒரேயொரு ஆதாரத்தினையும் பிடுங்கி தமது எஜமானரிடம் ஒப்படைத்து விட்டனர்.
மக்கள் நடு வீதிக்கு வந்தனர். ஒப்பாரியும் ஓலங்களும் உலகெங்கும் கேட்கின்றது. அரசியல்வாதிகளின் காதுகளுக்கு எட்ட அடுத்த தேர்தல் வரவேண்டும். அல்லது போட்டிக்கட்சிக்காரன் பிரச்சினைகயை கையில் எடுக்க வேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!