மஹிந்தவின் எம்பிப் பதவிக்கு உரிமை கோரும் சாந்த பண்டார

 

 

[முஹம்மட் உவைஸ்]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வகிக்கும் எம்பி பதவிக்கு தானே சொந்தக்காரன் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் இளைஞ்சர் அமைப்பின் தலைவருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்;

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ குருநாகலில் போட்டியிட்டதால்தான் நான்தோல்வியடைந்தேன்.அவர் முதலாமிடம்.நான் ஒன்பதாமிடம்.வெறும் 131 வாக்குகளால் நான் தோல்வியடைந்தேன்.

அதுமட்டுமன்றி அந்த மாவட்டத்தில் எமது கட்சிக்கு இருந்த 11 எம்பிக்கள் 8 ஆகக் குறைவடைந்தனர்.எல்லோரும்ஒன்றிணைந்து ஆசனங்களை அதிகரிப்பதை விட்டுவிட்டு என்னைத் தோற்கடிக்கும் வேலையைத்தான் செய்தனர்.

அதுபோக,நான் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய போவதாகவும் பிரசாரம் செய்தனர்.இதனால்தான் நான்தோல்வியடைந்தேன்.உண்மையில்,மஹிந்த இப்போது வகித்துக்கொண்டிருக்கும் எம்பிப் பதவி எனக்குஉரியதுதான்.அவர் போட்டியிட்டிருக்காவிட்டால் நிச்சயம் நான் வென்றிருப்பேன்.

இருந்தாலும்,எனது தோல்வியை நான் ஏற்றுக்கொள்கிறேன்.தோற்றது நான் அல்ல குருநாகல் மக்கள்தான்.இப்போதுஅவர்கள் எனது தோல்வியை எண்ணி வருத்தப்படுகின்றனர்.

இந்த நாட்டுக்கு மிகப் பெரிய சேவை செய்த-இரண்டு தடவைகள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவி வகித்தஒரு மனிதர் எம்பி பதவியை வகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை எண்ணி நான் கவலைப்படுகின்றேன்.என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!