உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதியின் கதை முடிந்துவிடும்

 

[முஹம்மட் உவைஸ்]

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இப்போது நடத்தினால் ஜனாதிபதியின் கதை முடிந்துவிடும்.அவரின் பலம்என்னவென்பது தெரிய வந்துவிடும் என்று ஜேவிபியின் முன்னாள் எம்பி லால் காந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்அவர் மேலும் கூறுகையில்;

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்துக்கொண்டு செல்வதற்கு காரணம் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்ட பிளவே அன்றி வேறில்லை.தேர்தலை நடத்தினால் ஜனாதிபதியின் பலம் தெரிந்துவிடும்.அந்தத்தேர்தல் ஜனாதிபதி பதவியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தலாக அமைந்துவிடும்.

ஜனாதிபதியால் தனித்துச் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல முடியாது.எம்முடன் இணைந்துதான் அவரால் தேர்தலில்குதிக்க வேண்டி வரும்.கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் உண்மை புரியும்.இதனால் பலத்தை அதிகரித்துவிட்டுதேர்தலுக்குச் செல்வதே அவரின் திட்டமாகும்.

.ஆனால்,புதிய தேர்தல் முறைமையை தயாரித்துவிட்டே தேர்தலுக்குச் செல்லப் போவதாக அரசுஅறிவித்துள்ளது.இப்படியான ஒரு முறைமை உலகில் எங்கும் இல்லை.உண்மையில்,தேர்தலை நடத்துவதற்கானஅதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை.அவரால் தனித்து எதையுமே செய்ய முடியாது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக ஜனாதிபதியால் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாது.எடுத்தால் அவர்கள் அரசைவிட்டுச் சென்றுவிடுவார்கள்.ஐக்கிய தேசிய கட்சி வழங்கிய அதிகாரங்களை அவரால் மீள பெறமுடியாது.

ஐக்கிய தேசிய கட்சியுடன்தான் அவரின் அதிகாரம் இணைந்து காணப்படுகின்றது.ஐக்கிய தேசிய கட்சிஇல்லையென்றால் மைத்திரிக்கு அதிகாரம் இல்லை.இப்போது ஒரு பியோனுக்கு இருக்கின்ற அதிகாரம்கூடஜனாதிபதிக்கு இல்லை.-என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!