நுவரெலியா நாளாந்தம் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் கிரகரி வாவியினை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நுவரெலியா மாநகரசபையினர் முன்னெடுத்துள்ளனர்
கிரகரி வாவியில் பாசி செடிகள் படர்ந்து வாவி முழுவதும் குவியல் குவியலாக உள்ளதை அகற்றி கரைகளில் உள்ள புதர்களை அகற்றியும் வாவி முழுவதும் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளையும் கழிவு பொருட்களையும் அகற்றி சுத்தம் செய்து ஜே சி பி இயந்திரத்தினை பயன்படுத்தி ஆழப்படுத்தியும் அகலப்படுத்தியும் வருகின்றனர் .
இதன்போது பெருமளவான கழிவுப்பொருட்கள் வாவிக்கரையில் இருந்து மீட்கப்பட்டது. இது எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கும் வாவிக்கும் ஆபத்தினை ஏற்படுத்தும் என மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான கருத்து தெரிவித்தார்.
வி.தீபன்ராஜ்



Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More