சிறுபான்மை சமூகம் தொடர்பிலும் அதன் இருப்பு தொடர்பிலும் தெளிவானதும் தூரநோக்குடனானதுமான அறிவும் சிந்தனையும் கொண்ட ஒரு சில புத்தி ஜீவிகளில் மிகவும் முக்கியமானவரே வை.எல்.எஸ் ஹமீட் அவர்கள்.
அவரோடு கடந்த 2015 ம் ஆண்டிலிருந்து தொடர்பினை பேணிவந்திருக்கிறேன், பல்வேறு பயணங்களில் இணைந்து இருந்திருக்கிறேன், அவரோடு அமர்ந்து சமூகம், அரசியல், ஆன்மீகம், சர்வதேசம், சட்டம், மொழி மற்றும் இலக்கியம் என்று பல்வேறு தலைப்புக்களில் உரையாடியிருக்கிறோம்.
இளைஞர்கள் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டவராக இருந்தார் என்பதை எம்மால் உணரமுடிந்தது.
அரசியல் வாதி என்ற நிலையையும் தாண்டி அரசியல் ஞானியாகவே அவரது கருத்துக்களும் அறிக்கைகளும் அவரை அடையாளப்படுத்தியிருக்கிறது.
பாராளுமன்றத்தில் நமது சமூகம் தொடர்பில் ஓங்கி ஒலித்திருக்கவேண்டிய குரலுக்கு சொந்தக்காரர் அவர். நமது கைசேதம் அவரை சரிவர இந்தச் சமூகம் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்பதே உண்மை.
இருப்பினும் சிக்கலான சந்தர்ப்பங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக அதன் தலைவர் ரிசாட் பதியுதீன் (பா.உ) அவர்களோடும் அரசியல் உச்சபீடத்தோடும் இணைந்து நாட்டினதும் சமூகத்தினதும் நலனுக்காக பல்வேறு தீர்மானங்களில் பங்களிப்புக்களை வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது மறுமைவாழ்வுக்காக அந்த வல்ல பெரிய இறைவனிடம் பிரார்த்திப்பதோடு அவரது குடும்ப உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் இறைவன் பொறுமையும் ஆறுதலும் கிடைக்க வேண்டுகிறேன்.
#முர்ஷித்

Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More