இயற்கை குடிபானங்களின் விலையேற்றம்.

(துறையூர் தாஸன்)

கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் கடும் வரட்சி மற்றும் உஸ்ணமான கால
நிலையினால் கண் நோய் மற்றும் வைரல் காய்ச்சல் ஏற்படுவதற்கான சத்தியக்கூறுகள் உள்ள நிலையில், இயற்கையான குடிபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது. கடும் வெப்பத்தை தனித்துக் கொள்ள பலர் குளிர்பானக் கடைகளை நாடி வருகின்றனர். இதனால் குளிர்பானக் கடை நடத்துபவர்கள் மிகுந்த இலாபம் ஈட்டி வருகின்றனர்.


திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பிரதான வீதிகளில் இடைக்கிடையே தொடராக பல திடீர் குளிர்பானக் கடைகள் தோன்றியுள்ளன. இங்கு இளநீர், நொங்கு, வெள்ளரிப்பழம், தர்பூசணி என்பன அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இளநீர் ஒன்று 80 ரூபா முதல் 120 ரூபாவிற்கு விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!