சம்மாந்துறை மண்ணில் இடம்பெற்ற மாபெரும் உதைப் பந்தாட்டத் திருவிழா 2023

Share on facebook
Share on twitter
Share on whatsapp

SAMMANTHURAI LEGEND JOLLY BOYS அணியினரின் ஏற்பாட்டில் உதைப்பந்தாட்ட போட்டி நிகழ்ச்சி 2023/03/17ம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில் சம்மாந்துறை மண்ணுக்காக சென்ற காலங்களில் விளையாடிய அனைத்து கழக வீரர்களையும் உள்ளடக்கிய ஒரு அணியாக SAMMANTHURAI LEGEND (JOLLY BOYS) அணியினர் களமிறங்கியிருந்தனர். இந்த அணியானது துறையூர் மண்ணின் உதைப்பந்தாட்ட ஜாம்பவான்களான T.L.M RAZEEN மற்றும் A.L JAWFER ஆகியோரின் தலைமையில் களமிறங்கியிருந்தது.

இவர்களினை எதிர்த்து ROYAL MADRID YOUUNG அணி களமிறங்கியிருந்தது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் இறுதியில் ROYAL MADRIT YOUNG அணியினர் 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றியினை தனதாக்கிக் கொண்டனர்.

எதிர்வரும் காலங்களில் STR LEGEND JOLLY BOYS அணியினர் இதுபோன்ற பல போட்டி நிகழ்ச்சிகளினை நடாத்தவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives