உலக தமிழர் பொருளாதார மாநாடு இன்று (18) முதல் 20-ம் திகதி வரை துபாயில்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

உலக தமிழர் பொருளாதார மாநாடு இன்று (18) முதல் 20-ம் திகதி வரை துபாயில்!

துபாயில் 9-வது உலக தமிழர் பொருளாதார மாநாடு இன்று (18) ஆரம்பமாகி 20-ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். 

அவரை மாநாட்டின் துணைத்தலைவர் தொழிலதிபர் பிரசிடெண்ட் அபூபக்கர் வரவேற்றார். 

இது குறித்து பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவிக்கையில்,

‘துபாயில் நடைபெறும் பொருளாதார மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும். 

தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க இந்த மாநாடு பெரும் துணையாக இருக்கும். 

3 நாட்கள் துபாய் மாரியட் அல் ஜடாபில் நடக்கும் நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது. 

எனவே தமிழ்நாட்டில் உள்ள வளம், அரசின் கொள்கை நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கும் முக்கியத்துவம், போன்ற பல விஷயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives