சம்மாந்துறையில் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

(பிறவ்ஸ்)
சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தில் இயங்கிவந்த ஆயுர்வேத வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், அதற்கான வெளிநோயார் பிரிவு கட்டிடத் தொகுதியும் நேற்று (10) திங்கட்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைக்கப்பட்டது.

தற்போதைய பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை, தற்போது சகல வசதிகளும் கொண்ட மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!