கடினமாக இருந்தாலும் மக்கள் வரிச்சுமையை சுமக்க வேண்டும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் உள்ள அனைவரிடமும் வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்த போதிலும், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அதனை 100,000 ரூபாவாக அதிகரிக்க முடிந்தது.
இதற்கு உறுப்பினர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் என அனைவரும் பணம் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் கொடுப்பனவாக பெறும் எரிபொருள், வீட்டு வாடகை போன்றவற்றுக்கு நிறைய வரி செலுத்த வேண்டியுள்ளது.
எல்லோரும் அதை உணர்கிறார்கள். மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரிடமிருந்தும் வரி அறவிடப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, இதை எப்படியும் செய்ய முடியாது என்று கண்டறியப்பட்டது, இதன் மூலம் 100,000 ரூபாய் வரையான சம்பளத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வரிகளை குறைத்து வரிகளை மாற்றினால் இந்த தொகையை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற முடியாமல் போகும்.
பின்னர் இந்த ஒப்பந்தம் முற்றாக இல்லாமல் போய்விடும். அப்படி கடன் பணம் இல்லாமல் நாட்டை நடத்தி செல்ல முடியும் என யாராவது கூறினால் அதனை ஏற்க தயாராக இருக்கின்றோம். ஏனென்றால், நாட்டுக்குத் தேவையான கனிம எண்ணெய், உரங்கள், இரசாயனங்கள், மருந்துகள், இயந்திரங்கள் மூலப்பொருட்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டும்.
எனவே இவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய விரும்பினால், இறக்குமதி செய்யும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும். அதற்கு போதுமான அளவு இருப்பு இருக்க வேண்டும். அதற்கு உலகம் ஏற்றுக்கொண்ட சூத்திரம் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this:
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More