புத்தளம் வெடி பொருட்கள் மீட்பு‌ : வழக்கு விசாரணை நாளை தொடரும்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

புத்தளம் வண்ணாத்தவில்லு லெக்டோ தோட்டத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று புத்தளம் மேல் நிதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான சான்த ஹப்பு ஆராச்சி தலைமையில் ஹசித சமன் பொன்னம்பெரும மற்றும் நயோமி விக்ரமசேகர ஆகிய மூவரடங்கிய

நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைகள் இடம் பெற்றன.

முறைப்பாட்டாளர் சார்பில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசன்த பெரேரா மற்றும் சட்டத்தரணி உதார ஆகியோர் பிரசன்னமாகியதுடன் சாட்சிவிசாரணைகளை மெற்கொண்டனர்.

பதிவாளர்,மற்றும் வண்ணாத்தவில்லு வெடிபொருளுடன் தொடர்புபட்ட

இன்றைய சாட்சி விசாரணையின் போது மாவனல்லை நிதிமன்ற வாகனத்தினை வாங்கிய நபர்,மற்றும் வண்ணாத்திவில்லுவில் கைப்பற்றப்பட்ட பொருட்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பொறுப்பேற்ற பொலீஸ் அதிகாரி ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

பிரதி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கஸ்ஸாலி ஹூசைன்,சட்டத்தரணி ருஸ்தி ஹபீபின் பணிப்புரைக்கமைய முஹம்மத் சாலி அக்ரம்,றிஸ்வான் நுவைஸ் ஆகியோர் ஆஜராகினர்.

மேற்படி வழக்கு விசாரணைக்கு மஹர சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள முஹம்மத் சரீபு ஆதம் லெப்பை என்னும் கபூர் மாமா மன்றில் ஆஜர்படுத்தப்படாமையினால் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளதாக நீதவான்கள் குறிப்பிட்டு அவரை அழைத்துவருமாறு உத்தரவு பிறப்பித்த நிலையில் வழக்கு விசாரணைகளை பிற்பகல் 2.00 மணி வரை ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்றரை மணித்தியாலயங்கள் வரை இடம் பெற்ற வழக்கின் மேலதி விசாரணைகளை நாளை புதன்கிழமை எடுத்துக் கொள்வதாக நீதவான்கள் தெரிவித்தனர்.

புத்தளத்தில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா –

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives