வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்யுமாறு நுவரெலியாவில் கையொப்பம் சேகரிப்பு

Share on facebook
Share on twitter
Share on whatsapp

வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்யுமாறு நுவரெலியாவில் கையொப்பம் சேகரிப்பு.

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை தான்தோன்றித்தனமாக தடுத்து வைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரி
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது

நுவரெலியாவில் “கோட்டா கோ கம” கிளை இளைஞர்கள் , பல்கலைக்கழக மாணவர் மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

ரணில் ராஜபக்க்ஷ அரசின் அடாவடித்தனத்தை கண்டு அஞ்சபோவதில்லை வசந்த முதலிகே இன்னும் தடுத்து வைக்கப்பாட்டுள்ளவரை உடன் விடுவிக்க வேண்டும் எனவும் ,
அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஒடுக்குமுறைகளை பயன்படுத்துவதை கைவிடவேண்டும் எனவும் , சுகாதாரமற்ற இடத்தில் பாதுகாப்பற்ற இடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் இதனால் அவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் , ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக மிகவும் பயங்கரமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து கையொப்பம் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வி. தீபன்ராஜ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives