முதற் தடவையாக 9A சித்திகளைப் பெற்ற மாணவரை நேரில் சென்று பாராட்டிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

முதற் தடவையாக 9A சித்திகளைப் பெற்ற மாணவரை நேரில் சென்று பாராட்டிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் …!

அண்மையில் வெளியாகிய க.பொ.த.(சா/த)ப் பரீட்சை பெறுபேறுகளின் அனைத்துப் பாடங்களிலும் 9A சித்திகளைப் பெற்ற கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவன் என்.எம். நப்றத் மற்றும் 7A,2B பெற்ற மாணவி எஸ்.எச்.எப்.ஹீறா ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்துக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் சஹுதுல் நஜீம் இன்று(28) நேரில் சென்று மாணவர்களுக்கு தனது வாழ்த்தினை  தெரிவித்ததுடன் மலர் மாலை அணிவித்து கௌரவித்துப் பாராட்டினர்.

 இதன் போது பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிஸாத்,பாடசாலையின் பிரதி அதிபர்,உதவி அதிபர், பகுதித் தலைவர்கள் சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலையில் முதன்முதலாக க.பொ.த சாதரண தரப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் (2021) மாணவன் என்.எம்.நப்றத் அனைத்துப் பாடங்களிலும்9A சித்தி பெற்று பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதோடு மற்றுமொரு மாணவி எஸ்.எச்.பாத்திமா ஹீறா 7A ,2B என்ற சித்தியயைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது

குறித்த பாடசாலையானது  வலய மட்ட பாடசாலைகள் தரப்படுத்தலில்  நான்காவது இடத்தை பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

(எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives