எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா விற்கு தேசிய மட்டத்தில் இம்முறை முதலாமிடம்!!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா விற்கு தேசிய மட்டத்தில் இம்முறை முதலாமிடம்!!

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிக்காட்டலுடன் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களிடையே தேசிய மட்டத்தில் வெற்றிப்பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு 17.11.2022 அன்று வியாழக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கொழும்பு 07, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த தேசிய இலக்கியப் போட்டிக்காக திறந்த சிறுவர் கதையாக்கப் போட்டியிப் பிரிவில் ” பறக்கத் தெரியாத பறவைகள்” எனும் தலைப்பில் சிறுவர் கதை ஆக்கத்தை முன்வைத்து முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர அவர்களது கரங்களால் பஸ்யால மே.மா/மினு/எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும் கவியரசியுமான செய்யது அஹமது இஸ்மத் பாத்திமா அவர்கள் தேசிய இலக்கிய விருது வழங்கலின் போது தங்கப்பதக்கம், பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலை மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கெளரவிக்கப்படுவதனை படத்தில் காணலாம். அருகில் தற்போதைய புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ விதுர
விக்கிரமநாயக்க அவர்களும்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருமான திருமதி தரணி அனோஜா கமகே அவர்களும் அருகில் இருப்பதைக் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives