கோதுமை மாவின் விலை குறைவடையும்?

Share on facebook
Share on twitter
Share on whatsapp

எதிர்வரும் காலப்பகுதியில் கோதுமை மாவின் விலை குறைவடையும் என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை எதிர்வரும் 10 நாட்களில் நாட்டை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களும் கோதுமை மா இறக்குமதியை கட்டுப்படுத்தியதுடன், இந்தியா கோதுமை மா ஏற்றுமதியை தடை செய்ததால் இலங்கையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 400 ரூபாவை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives