அரச எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தனியாருக்கு! எரிசக்தி அமைச்சர்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1,250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் நிர்வாகத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் தனியாருக்கு வழங்க உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அதிகாரத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களை பெற்றுக்கொள்ள 24 நிறுவனங்கள் விலை மனுக்களை முன்வைத்துள்ளதுடன் அவற்றில் தகுதியை பூர்த்தி செய்துள்ள சில நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இலங்கை பெட்ரோலிக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தனியாருக்கு வழங்கும் வேலைத்திட்ட்தின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்தில் காஞ்சன விஜேசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives