அரச ஊழியர்களுக்குசம்பளம் வழங்க நிதித் தட்டுப்பாடு !

Share on facebook
Share on twitter
Share on whatsapp

நாட்டில் தற்போது காணப்படும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் சம்பள கொடுப்பனவை வழங்குவதற்குக்கூட போதுமான வருமானம் கிடைக்கவில்லையென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று ஆரம்பமான சபை அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் விளக்கமளிக்கையில்,

நாட்டில் தற்போது காணப்படும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் சம்பள கொடுப்பனவை வழங்குவதற்குக் கூட போதுமான வருமானம் கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சிய டைந்துள்ளதால் இந்த ஆண்டு செலுத்த வேண்டிய தொகையை அதிக அளவில் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு நூறு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியுள்ளது. அவர்களும் கடன் பெற்றே இந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

ஆனால், திறைசேரியிலுள்ள மக்கள் பணத்தை இதற்கு செலுத்தவும் முடியாது. முன்பை போன்று பணத்தை அச்சிட்டு வழங்கவும் முடியாது. கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் இடம்பெறுவதால் நிதி ஒழுக்கத்தை பேண வேண்டியுள்ளது. தவறும் பட்சத்தில் சில யோசனைகளை நிறைவேற்ற முடியாது.

எந்த அரசாங்கம் வந்தாலும் நாட்டிலுள்ள நிதி நெருக்கடி குறித்து ஆழமாக ஆராய வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நிதி ஒழுக்கத்தை பேண வேண்டும் என்ற நிபந்தனை இருந்த போதிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பணத்தை அச்சிட முடியாது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives