காயங்கேணி  பிரதேசத்தில் இளைஞனின் சடலம் மீட்பு!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

காயங்கேணி  பிரதேசத்தில் இளைஞனின் சடலம் மீட்பு!

 

வாகரைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காயங்கேணி கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று (20) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

 

வாகரைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த இளைஞனின் உடல் மீட்கப்பட்டு பொலிஸாரின் உத்தரவின் பேரில் அக்கீல் அவசர சேவை வாகனத்தின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞன் அதிகம் கையடக்க தொலைபேசி பாவிப்பவர் எனத் தெரிய வருகின்றது.

 

இவர் காயங்கேணி மத்தி, மாங்கேணி எனும் முகவரியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்று மாலை உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives