பாதிப்பு ஏற்படாத வகையில் கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வுகாண பைசால் காசிம் கோரிக்கை!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

பாதிப்பு ஏற்படாத வகையில் கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வுகாண பைசால் காசிம் கோரிக்கை!

 

துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் கௌரவ நிமல்சிறிபால டி சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இன்று (20) நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் கௌரவ பைசால் காசிம் அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அம்பாறை மாவட்ட ஒலுவில் துறைமுகத்திலிருந்து Break Water ஐ அகற்றி மீன்பிடித்துறைமுகத்திற்கு பாதிப்பு வராதவகையில் கடலரிப்பினால் பாதிக்கப்படும் ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை போன்ற பிரதேசங்களின் நிலங்களையும் மீனவர்களின் மீனவத்தொழிலையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடனடியாக அதற்குறிய தொழில்நுட்ப அறிக்கையை பெற்று நிதி அமைச்சின் மூலம் நிதியைப்பெற்று நடவடிக்கை எடுக்குமாறு துறைமுக அதிகாரசபையின் தவிசாளருக்கு கௌரவ அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.

 

அத்துடன் அடுத்துவருகின்ற ஆலோசனைக்குழுக் கூட்டத்திற்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives