இணையத் தளத்தின் ஊடாக நிறுவனங்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகள்

நிறுவனங்களைப் பதிவு செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல சேவைகள் இணையத் தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, கம்பனிகளைக் கூட்டுத்தாபனமாக்குதல் மற்றும் நிறுவனங்களின் இலச்சினையை அங்கீகரித்தலுக்கான கடித ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் அது தொடர்பான கொடுப்பனவுகளை இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான சேவைகள் குறித்த விபரங்களை eroc.drc.gov.lk என்ற இணையத்தள முகவரியின்  மூலம் அறிந்து கொள்ள முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!