இலண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில்(CHOMP) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.இம் மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20 ஆந் திகதி வரை இலண்டன் நகரில் நடைபெறவுள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் 53 பொதுநலவாய உறுப்பு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன கலந்துகொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுபீட்சம், ஜனநாயகம் மற்றும் சமாதானம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் தேசங்களின் பன்முக சமூகத்தினர் ஒன்றாக செயற்படுவதே பொதுநலவாயமாகும். பொதுநலவாய அரசத் தலைவர்களின் மாநாட்டின் போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஆகியோர் பொதுவான விழுமியங்களை மீளுறுதி செய்யவும், தாம் முகங்கொடுக்கும் உலகளாவிய சவால்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக இளம் வயதினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பவற்றை அடையாளப்படுத்துவதற்காகவும்  ஒன்றுகூடுகின்றனர்.

இலண்டனில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டின் தொனிப்பொருள் “பொதுவான எதிர்காலத்தை நோக்கி” என்பதாகும். இவ்வமைப்பானது உலக சவால்களுக்கு பொறுப்பாகவும், பொதுநலவாய நாடுகளின் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக இளம் வயதினருக்கு மிகவும் சுபீட்சமான, பாதுகாப்பான, நிலைபேறான மற்றும் நியாயமான எதிர்காலத்தை வழங்குவதை உறுதிப்படுத்தி பொதுநலவாயத்தின் பலத்தை கட்டியெழுப்புவது குறித்து கவனம் செலுத்துவதாகவும்  அமைந்துள்ளது. பொதுநலவாய பட்டயத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள பலவீனமான உலகளாவிய வர்த்தக மற்றும் முதலீட்டு பாய்ச்சல்கள், புதிய எல்லை பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், சிறிய மற்றும் ஏனைய பாதிப்படையும் நாடுகளில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் மற்றும் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் உள்ளார்ந்தம் ஆகியவற்றின் பகிரப்பட்ட பெறுமதிகள் என அனைத்து உறுப்பு நாடுகளினாலும் முகங்கொடுக்கப்படும் பொதுவான சவால்களை அடையாளப்படுத்தி பொதுநலவாய நாடுகளின் குடிமக்கள் அனைவருக்கும் மிகவும் நிலைபேறான, நியாயமான, பாதுகாப்பான மற்றும் சுபீட்சமான எதிர்காலத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தலைவர்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.

பொதுநலவாய அரச தலைவர்களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி சிறிசேன அவர்களின் பங்குபற்றலானது, பொதுநலவாயத்திற்கான இலங்கையின் திட உறுதிப்பாட்டை மீளுறுதி செய்தல், இவ்வமைப்பு மற்றும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளுடனுமான இலங்கையின் பங்காண்மையை ஆழமாக்குதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஏப்ரல் 19 ஆந் திகதி நடைபெறவுள்ள அரச தலைவர்களின் சந்திப்பு, ஏப்ரல் 20 ஆந் திகதி தலைவர்களின் பின்னடைவு மற்றும் “SDG களை வழங்குதல், வர்த்தகம், சமூகம் மற்றும் அரசாங்கங்களை வரிசைப்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் ஏப்ரல் 18 ஆந் திகதி பிரதான பேச்சாளராக பொதுநலவாய வர்த்தகப் பேரவையில் அடையாளப்படுத்தல் ஆகியன ஜனாதிபதியின் செயற்பாடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொதுநலவாய வர்த்தக நலன்களைப் பெற்றுக்கொள்ள தெற்காசியாவில் வர்த்தக மற்றும் முதலீட்டு மையமாக இலங்கையை தரப்படுத்திய இலங்கையைச் சேர்ந்த பிரதானமாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத்துறையைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட முயற்சியாளர்கள் பொதுநலவாய வர்த்தகப் பேரவையில் பங்குபற்றவுள்ளனர். உலகில் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழியாக இலவச மற்றும் வர்த்தக உள்ளடக்கத்திற்கான செயற்பாட்டினை உருவாக்க இவ் வர்த்தகப் பேரவை மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுநலவாய நீலப் பட்டய முயற்சியில் இலங்கையானது சம்பியன் நாடாக உருவாகும் என்பதுடன் நீலப் பொருளாதாரத்தின் நிலைத்திருப்புக்காக ஒத்திசைவான சமுத்திர மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதில் ஏனைய உறுப்பு நாடுகளுடன் சேர்ந்தும் ஈடுபடவுள்ளது. இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் இலங்கை ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ள மிக முக்கிய பிரிவாக சதுப்புநிலக் காடுகளின் மீள் உருவாக்கம் அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!