இரும்புக் கம்பிகளால் கடலுக்கு அடியில் பாலம் கட்டிய சீனா

சீனாவானது பயண நேரத்தை குறைப்பதற்காக தென்சீன நகரங்களான சுகாய், மேகாவ் ஆகியவற்றையும் ஹொங்கொங்கையும் இணைக்கும் பாலத்தை சீன கட்டி முடித்துள்ளது.

சீனாவின், ஹொங்கொங்கையும் மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்கும் விதத்தில் கடல் மீது 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரை மற்றும் கடலுக்கு அடியில் சுரங்கப் பாலம் என இரு விதமாக பாலத்தை சீனா கட்டி உள்ளது. இதற்காக கடல் நடுவில் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பாறைகள் மற்றும் மண்ணால் நிரப்பப்பட்டு இரண்டு தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த தீவில் 59 இரும்புத் தூண்கள் நடப்பட்டு பாலம் கட்டப்பட்டது. கடலுக்கு அடியில் 28 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனைத் தாங்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட்டு உள்ளது.

சுமார் 6,720 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது, 50 கிலோ மீட்டர் நீள பாலத்தில், 6 கிலோ மீட்டர் தூரம், கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!