கராத்தே பயிற்சிப் பட்டறை

(துறையூர் தாஸன் )

ஜப்பான் சொட்டோகான் ,இலங்கை கிழக்கு மாகாண கராத்தே சங்கத்தின் பயிலுனர்களுக்கான பயிற்சிப் பட்டறை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில், இலங்கை கராத்தே சங்கத்தின் உப தலைவர் எஸ்.மனோகரன் தலைமையில் நேற்று(04) இடம்பெற்றது.
ஜப்பான் சொட்டோகான் கலைக் கல்லூரியின் தேர்ச்சி பெற்ற போதனாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர் பிரதம அதிதியாகவும் வளவாளராகவும் கலந்து கொண்டு
கராத்தே பயிற்சிகளை வழங்கினார்.
வாழைச்சேனை,கல்முனை,மட்டக்களப்பு போன்ற பல்வேறு பிரதேசங்களிலிருந்து சுமார் நூறுக்கு மேற்பட்ட கராத்தே மாணவர்கள் பங்குபற்றியதுடன் இப்பயிற்சிப்
பட்டறை நாளையும் இடம்பெற்று சான்றிதழ் வழங்கும் வைபவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!