வழமைக்கு திரும்பிய தனியார் பஸ் சேவை!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

வழமைக்கு திரும்பிய தனியார் பஸ் சேவை!

தனியார் பஸ் சேவைகள் இன்று வழமை போல் இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

​​பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பாக நேற்று அதிகாரிகளிடமிருந்து சாதகமான பதில் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 

எனவே, இன்று பஸ்கள் ஓரளவுக்கு இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு QR குறியீட்டின் ஊடாக வெளியிடப்படும் எரிபொருள் ஒரு வார கால பாவனைக்கு போதுமானதாக இல்லை எனக் கூறி பல தனியார் பஸ் தொழிற்சங்கங்கள் நேற்றைய தினம் சேவையிலிருந்து விலகிக் கொண்டன.

 

பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதேவேளை நேற்று மாலை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!