குமார வெல்கம அவர்களின் தலைமையிலான புதிய(நவ) லங்கா சுதந்திரக் கட்சியும்
வண. அதுரலியே ரதன தேரர் உள்ளிட்ட குழுவினரும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியது.
எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். இராசமாணிக்கம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கலந்துகொண்டு, சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் தமது கட்சியின் கருத்துக்களை ஜனாதிபதி அவர்களிடம் விரிவாக முன்வைத்தனர்.
தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி அவர்கள் உறுப்பினர்களுக்கு அறிவித்தார்.
திரு குமார வெல்கம தலைமையிலான புதிய (நவ) லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் வண. அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட விஜய தரணி தேசிய சபையும் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்து கலந்துரையாடியது.
ஜனாதிபதி அவர்களினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக அரசாங்கத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அண்மையில் ஆரம்பமாகிய நிலையில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களும் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-08-04
Share this:
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More