துருக்கி தூதுவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துண்கா சுஹதார் இன்று (26) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இருதரப்பு உறவுகளை மையப்படுத்தி நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்செயல் குறித்து அவர் தனது கவலையை வெளியிட்டதுடன், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கையில் துருக்கி முதலீடு மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திவருவதை அமைச்சர் பிரஸ்தாபித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!