சம்மாந்துறை கல்வி நிலை மிகவும் சீரழிவு; பெற்றோர் விசனம்!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கவிழுமியங்கள் பெருமளவு சீரழிந்து வருகின்றதாக சம்மாந்துறை பிரதேசத்தில் மக்கள் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் உரிய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கவனம் செலுத்தாத நிலைமை உணரப்படுவதாக பெற்றோர் தரப்பினர் சிலரினால் ‘நியூஸ்ப்ளஸ்’ இன் பொதுமக்கள் கருத்துக்கள் பிரிவுக்கு செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.
அதில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள விடயமானது,

தொடர்ச்சியாக 2 வருடங்களுக்கு மேலாக பாடசாலைகள் சீராக நடைபெறாமையால் மாணவர்களின் கல்வி வீழ்ச்சியடைந்து செல்வதாகவும், இது விடயமாக ஊரின் நிர்வாகங்களிடமும், வலயக்கல்வி அலுவகத்தின் கவனத்திற்கும் குறித்த விடயம் கொண்டு செல்லப்படுகின்றது.

அதாவது, அரசாங்க அறிவித்தல்களின் பிரகாரம் பாடசாலை மூடப்பட்டிருந்தாலும் அண்மித்த பாடசாலைகளில் கல்வியினை புகட்டுமாறு ஆசிரியர்களுக்கு பணிக்கப்பட்டதற்கமைவாக எமது பிரதேசங்களில் அவை இடம்பெறுவதாக தெரியவில்லை.

அத்துடன், பெரும்பாலான ஆசிரியர்கள் பாடத்திட்டங்களை இன்னும் முடிவுறுத்தாமல் இடைநடுவில் கைவிட்டுள்ளனர். இது மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிப்பாதாகும்.

அது மாத்திரமல்லாமல், எமதூரை அண்மித்த ஊர்களில் பாடசாலையை இடம்பெறாவிட்டாலும் பகுதிநேர கல்வி நடவடிக்கைகளில் பாடசாலை நிர்வாகம் கவனம் செலுத்துகிறது.

ஆனால், சம்மாந்துறை வலயத்தில் அவ்வாறு இடம்பெறாமல் உள்ளது. இதனை வலயக்கல்வி அதிகாரிக்கு தெரிவிக்க கட்டாயம் ஒவ்வொரு பெற்றோரினதும் ஆதங்கமாக உள்ளது.

குறிப்பாக சம்மாந்துறை கோட்டத்திலுள்ள பாடசாலைகளிலேயே பெரிதும் கல்வி அலட்சியங்களும், கவயீனங்களும் இடம்பெறுகின்றன.

இதனால் மாணவர்களின் கல்வி நிலை சீரழிவது மாத்திரமல்லாது, ஒழுங்களும் சீர்கேட்டில் செல்லும் நிலை உருவாகின்றது – என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது விடயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

(நமது நிருபர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives