திறனொளியின் திறமைக்கானதேடல் விருதுவழங்கும் நிகழ்வு

திறனொளிகலை கலாசார ஊடகவலையமைப்பின் இணைய வானொலி, ஆஸாத் எப்.எம்இன் ஓராண்டு நிறைவையொட்டி சம்மாந்துறை வலய பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்படும் திறனொளியின் திறமைக்கானதேடல் விருது வழங்கும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் மாணவர்களுக்கான கலை, இலக்கியம் தொடர்பான பயிற்சிபட்டறையும் அறிமுக நிகழ்வும் அண்மையில் கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் அறிவிப்பாளர் ஏ.ஸி.நௌஷாதின்  நெறிப்படுத்தலுடன், அமைப்பின் நிருவாக உறுப்பினரும்மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் எம்.சி.எம்.காலித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஆஸாத் எப்.எம் இணையவானொலியின் ஸ்தாபகரும் அமைப்பின் போஷகரான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.ஹபூல் ஆஸாத் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். வளவாளர்களாக துறைசார்ந்த மூத்த இலக்கியவாதிகள், கலைஞர்கள், கல்விமான்கள் எனபலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விரிவுரைகளை நடாத்தியிருந்தமை குறிப்படத்தக்கதாகும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!