வலுசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்… ஓமான் தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

Share on facebook
Share on twitter
Share on whatsapp

வலுசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்…

ஓமான் தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

 

எரிபொருள், எரிவாயு, வலுசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஓமான் தூதுவர் அஹ்மத் அலி சயீத் அல் ரஷ்தி (Ahmed Ali Saeed Al Rashdi) ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.

 

தனது சேவையை முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறவுள்ள ஓமான் தூதுவர் இன்று (01) முற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

ஓமானில் தற்போது சுமார் 25,000 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். பயிற்சித் துறையில் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் உதவுமாறு ஜனாதிபதி அவர்கள் தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

 

சயீத் அல் ரஷ்தி அவர்களின் 08 வருட பதவிக் காலத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இந்நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கான பரந்த வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

தான் ஓமான் வெளிவிவகார அமைச்சில் சேவைபுரிய செல்லவிருப்பதாகவும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அங்கிருந்து நடவடிக்கை எடுப்பதாக ரஷ்தி அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திஸாநாயக்கவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!