​​’ஒரே சீன கொள்கை’ இலங்கையுடன் இணங்குகிறது – தூதுவரிடம் பிரதமர் வலியுறுத்து!

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சீன பிரதி தூதுவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, ​​’ஒரே சீன கொள்கை’ இலங்கையுடன் இணங்குவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஹு வெய் யிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனாவின் பிரதித் தூதுவர் ஹு வெய் ஆகியோருக்கு இடையில் இன்று (21) முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்த சீன துணைத் தூதுவர், உணவு நெருக்கடியைக் குறைக்க சீனா இலங்கைக்கு அரிசியை நன்கொடையாக வழங்கும் என்று பிரதமரிடம் மீண்டும் உறுதியளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Archives

error: Content is protected !!