சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சீன தூதரகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒருகட்டமாக அம்பாறை மாவட்ட உதைப்பாந்தாட்ட கழகங்களுக்கான உதைப்பந்து விளையாட்டு பொருட்களும், பாதணியும் வழங்கும் நிகழ்வும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வறுமைக்கோட்டுக்குள் உள்ள குடும்பங்களுக்கான உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட் பௌண்டசனின் ஏற்பாட்டில் இன்று மாலை கல்முனை தனியார் மண்டபத்தில் அமைப்பின் இணைத்தவிசாளர் ஏ.ஜி.எம். அன்வர் நௌசாத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் பிரதம அதிதியாகவும் அவரது பாரியார் ஜின் ஜியாங் ஆகியோர் கலந்து கொண்டு தேவையுடைய மக்களுக்கு உணவுப்பொருட்களையும், விளையாட்டு கழகங்களுக்கான பந்து மற்றும் பாதணிகளை கையளித்தனர். இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ரக்கிப், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மதநாயக்க, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொலிஸ் உயரதிகாரிகள், சீன தூதரக உயரதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், பிராந்திய விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட் பௌண்டசனின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(நூருல் ஹுதா உமர்)
Share this:
- Click to email this to a friend (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- More