கிழக்கு மக்கள் அவையம் அங்குரார்ப்பணம்

கிழக்கு மக்கள் அவையம் அங்குரார்ப்பணம் நிகழ்வானது தேசிய காங்கிரஸ் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம் அதாஉல்லா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (02) அக்கறைப்பற்று அதாஉல்லா அரங்கில் இராஜாங்க அமைச்சர் அல்-ஹாஜ் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது . இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் டாக்டர். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். சுபைர், உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இவ் அவையின் பிரதான செயற்பாட்டாளர்களாக மாவட்டத்திற்கு ஒருவர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ் அவையம் அரசியல் கட்சி மற்றும் அரசியல் தலையீடுகளுக்கு அப்பால் தொடர்ச்சியாக சுயாதீனமாக செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!