அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால்

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்து, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று (06) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம், தமிழ் பிரதேசங்களில் முற்று முழுதாக வர்த்தக நிலையங்கள், அரச, தனியார் அலுவலகங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன்இ எதுவித போக்குவரத்துகளும் இடம்பெறவில்லை.

இதேவேளை, மருதமுனை பிரதேசத்தில் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் கண்ணாடிகள் உடைந்த நிலையில் குறித்த பஸ்கள், கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, கல்முனையில் இருந்து மட்டக்களப்புஇ அம்பாறை மற்றும் அக்கறைப்பற்றுக்கான பஸ் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.
மேலும், மருதமுனையில் கல்முனை- மட்டக்களப்பு பிரதான வீதியில் டயர்கள் எரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்மந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி, நிந்தவ{ர், அக்கரைப்பற்று போன்ற பிரதேசத்திலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!