அம்பாறை சம்பவம்: சம்மாந்துறை நம்பிக்கையார் சபை கண்டனம்

நேற்றிரவு அம்பாறையில் இடம்பெற்ற நாசகாரவேலை சமூக ஒற்றுமையை சீர்ழிக்கும் செயலென்பதுடன், இவ்வாறான செயற்பாடுகள் எந்த மதத்திற்கும் இடம்பெறக்கூடாது. இது இன ஒற்றுமையை குழிதோண்டிப்புதைக்கும் வகையில் இடம்பெற்றிருக்கும் நாசகார வேலையென்றே கூறவேண்டும் என சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம்.எம்.சலீம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இச் சம்பவம் குறித்த பக்கச்சார்ற்ற நடுநிலையான சட்டநடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான விஷமிகளுக்கு அரசாங்கம் சரியான பாடம்புகட்ட எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்து இன்று அவசரமாக கூடிய நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யதுல் உலமா, மஜ்லிஸ் அஷ்ஷ_ரா ஆகியவற்றின் தீர்மானத்திற்கமைவாக இவ்வாறான அசாதாரன சூழ்நிலையில் பொதுமக்கள் அமைதிகாக்குமாறும், பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!