விஷேட டெங்கு ஒழிப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு முக்கியம் – டாக்டர் கபீர் வேண்டுகோள்!

* 21 – 23 வரை ‘வீட்டுக் வீடு’ தீவிர தேடுதல் வேட்டை!

 
* டெங்கு பரவும் இடங்கள் கண்டறிப்பட்டால் உடன் நடவடிக்கை!!
 
* குடம்பிகள் பரவும் குவளைகள், நீர் தேங்கும் நிலைகள் இருந்தால் சலுகையற்ற சட்ட நடவடிக்கை தீவிரம்!!!
 
சுகாதார நிலைமைகளை பேணி வெற்றிப் பாதையில் எமது நாடு சென்று கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இதரப ல நோய்களை ஒப்பீட்டளவில் நோக்கும் போது டெங்கு நோயும் சமூகப் பாதிப்பின் முக்கிய காரணியாக விளங்குகின்றது.
 
ஏனைய நோய்களைவ வித்தியாசமான ஒரு ஆட்கொல்லியாக இந் நோய் இனங்காணப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.
 
இவ்வாறான நோயினை தடுப்படுத்தற்கான வழிமுறைகளை சுகாதாரப் பிரிவு, பொலிஸார் எவ்வளவுதான் நடவடிக்கைகள் எடுக்கின்ற பேதிலும் அதனை முற்று முழுதாக கட்டுப்படுத்தும் நிலை காணப்படாமைக்கு மூல காரணம் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமையே!
 
எத்தனையோ வழிமுறைகளில் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும் அறிந்தும் அறியா நிலையில் பலர் செயற்படுகின்றமை சமூக சுகாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன.
 
இந் நிலையில் 2020 இல் கல்முனைப் பிராந்தியத்தில் கூடுதல் அளவு டெங்கு நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ள போதிலும் சம்மாந்துறையில் 14 பேருக்கு மாத்திரமே டெங்கு பரவியுள்ளமை பாதுகாப்பாகும்.
 
இவ்வாறு குறைவான எண்ணிக்கையில் எமது பிரதேசம் சிறப்புத் தேர்ச்சியடைகின்ற சந்தர்ப்பத்தில் “பூச்சி ஆய்வாளர்களின்” கருத்துக்கணிப்பின் பிரகாரம் எமது பிரதேசத்தில் எதிர்காலத்தில் டெங்கு வைரலாக பரவ வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக சுகாதார பணியகத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றதாக அறியக் கிடைத்தது.
 
இது விடயமாக சம்மாந்துறை சுகாதார வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர். எஸ்.ஐ.எம். கபீர் உடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்,
“ஆம், ‘பூச்சி ஆய்வாளர்களின்’ கருத்தின் பிரகாரம் எதிர்வரும் மழை காலத்தில் டெங்கு நோயானது சம்மாந்துறையில் அதிகம் பரவ வாய்ப்புக்கள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 
இதனை கருத்திற் கொண்ட நாங்கள் கல்முனை சுகாதார பணியகத்தின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் 21, 22, 23 (21 – 23.09.2020) ஆகிய திகதிகளில் வீட்டுக்கு வீடு பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளோம். இந்த சுகாதார பரிசோதனை சுற்றிவளைப்பில் டெங்கு பரவக்கூடிய இடங்கள் அகப்பட்டால் அவை உடனடியாக சுத்தம் செய்யப்படும். மாறாக குடம்பிகள் பரவும் குவளைகள், பாத்திரங்கள், நீர் தேங்கிய நிலைமைகள் கண்டறியப்பட்டால் எவ்வித சலுகைகளுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இந்த ‘வீட்டுக் வீடு பரிசோதனை’ 3 நாள் செயற்றிட்டத்தில் கல்முனை பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார பணிமனைகளில் பணியாற்றும் 50 டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள், பொலிஸார், பொது அமைப்புக்கள், பிரதேச சபை போன்றன செயலாற்றவுள்ளனர்.
 
இவர்களுடன் கல்முனை பிராந்;திய சுகாதார பணிப்பாளர் டாக்டர். சுகுணன் அவர்களும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
எனவே, பொது மக்களிடம் அன்பாக வேண்டிக் கொள்வது என்னவெனில் குறித்த தினங்களில் இடம்பெறுகின்ற ‘வீட்டுக்கு வீடு’ பரிசோதனைக்கு முன்னர் தங்களது வீட்டுச் சுற்றுப்புற சூழல்களை தாங்களே சுத்தமாக வைத்திருங்கள்.
 
மேலும், தற்போதுள்ள குறைந்தளவிலான டெங்கு நோய் பரவலை மேலும் பாதுகாக்க சுகாதார பணிமனைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்” – என்றார்.
 
எனவே, இது விடயத்துக்கு நமது ஒத்துழைப்புக்களை நாமே வழங்குவோம்!
 
✍️ கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!