பாராளுமன்றிற்குள் ஆபாச படம் பார்த்த பாராளுமன்ற உறுப்பினர்…! வசமாக சிக்கினார்..

தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நகரில் அமைந்துள்ள அந்நாட்டின் நாடாளுமன்றில் வரவு செலவு திட்டம் மீதான வாசிப்பும் அது தொடர்பான விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்றம் கூடியதன் பின்னர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சபை அமர்வுகளை கவனிக்காது தன்னுடைய கையடக்க தொலைபேசியில் நீண்ட நேரம் எதனையோ பார்த்தப்படி அமர்ந்திருந்துள்ளார்.

இதனை அவதானித்த போது அவர் நீண்ட தன்னுடைய கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளி ஒன்றினை பார்த்தவாறு சபையில் அமர்ந்திருந்தமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த அவர், பெண் ஒருவர் தனக்கு அனுப்பிய தகவலை திறந்து பார்த்த போது அதில் ஆபாச காணொளி காணப்பட்டதாகவும், பெண்ணை எவரேனும் வற்புறுத்துகின்றனரா என நீண்ட நேரம் ஆராய்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் அவர் மீது விசாரணை நடத்துவதனை நாடாளுமன்ற ஒழுக்காற்று குழு கைவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!