கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் அவர்களின் வழிகாட்டலில் சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பெறுமதியான நீர் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரம்( 2018/02/19 )கல்முனை சாஹிரா தேசிய கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.எச்.முஹம்மட் தலைமையில் காலை ஆராதனை நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உப தலைவர் எம்.ஜெ.எம்
முஸ்தாக்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பி.ஜெளபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் தேசிய ரீதியாக குறிபார்த்து சுடும் போட்டியில் சாதனை படைத்த கல்லூரி மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்கள வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!