நமது சாத்வீக சமர்:

நமது சாத்வீக சமர்:
இது பாலமுனை பிரகடனத்தை வென்றெடுப்பதற்கானது.
தேர்தல் காலத்தில் இது ரணிலை விரட்டுவதற்கான ஆணை என நாம் சொன்னோம்.
சிலர் இது உள்ளுராட்சி தேர்தல்: மத்திய அரசின் ஆட்சியை பாதிக்காது என்றனர்.
ஆனால் இன்று மத்தியில் ஏதோ நடக்கிறது. பொறுத்திருப்போம்.
தேசிய காங்கிரஸின் இலக்கு இந்த நாட்டில் எல்லா மக்களும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதுவே.
அதற்காகவே நாம் ஓயாது செயற்படுகிறோம்.
மக்கள் பிழையாக வழி நடத்தப்படக்கூடாது என்பதில் நாம் கவனமாக உள்ளோம்.
வெற்றி தோல்வி எதுவாயினும் தயக்கமின்றி உண்மையை உரக்கச் சொல்லுவோம். காலம் கழிந்தாயினும் உண்மை ஒளிரும்; மக்கள் புரிந்து கொள்வர் என்பது எமது அசையாத நம்பிக்கை.
அரசியலில் முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
ஆனால் தூரநோக்கு, ஆழ்ந்த கரிசனை, ஈடுபாடு, அர்ப்பணிப்பு, துணிச்சல,; பக்குவம,; நிதானம், வாய்மை, நேர்மை, நாட்டின் மீதும்  மக்கள் மீதும் அன்பு இறையச்சம் என்பன இருத்தல் அவசியம்.
இத்தனையும் நமது தலைமைக்கும் கட்சிக்கும் வாயத்தமையினாலேயே நமது பின்னடைவுகள் இன்று வெற்றிகளாக மாறியுள்ளது.
நமது தூர நோக்கு வெற்றி பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
பதவி பட்டம் அதிகாரமில்லாமல் உண்மைக்காய் உழைத்து எதிர்ப்பரசியல் செய்வது இப்படித்தான் என கடந்த தேர்தலில் நாம் நிரூபித்துள்ளோம்.
இந்த சமரில் தளபதிகளாக- படைச்சிப்பாய்களாக- உதவியாளர்களாக- ஆதரவாளர்களாக பிராhர்த்திப்பவர்களாக என அனைத்து வழிகளிலும் எமக்கு துணைநின்ற அத்தனைபேருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
எம் அனைவரையும் சரியாக வழிநடத்திய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் அல்ஹம்துலில்லா.
இந்த வெற்றி உண்மையின் வெற்றி. இது  குதிரைக்கு வாக்களித்த உங்களின்  வெற்றி.
சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்
தேசிய காங்கிரஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!