எம்.டீ.எம். சகி லதீப் சர்வதேச ஆசியா ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி விருது வழங்கும் நிகழ்வில் இரு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிப்பு

இலங்கையின் இளம் மருத்துவ கண்டுபிடிப்பாளனும், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ மாணவனுமான எம்.டீ.எம். சகி லதீப் 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆசியா ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி விருது வழங்கும் நிகழ்வில் இரு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

ஆயுர்வித்யா விருது மற்றும் கீர்த்தி ஸ்ரீ தேச சக்தி ஆயுர் வித்யா பிரசாதி வித்யாபிமானி ஆகிய இரு தேசிய கெளரவ விருதுகளை மருத்துவ துறையில் மேற்கொண்ட தேசிய மற்றும் சர்வதேச சாதனைகளுக்காக கடந்த திங்கட்கிழமை (12.02.2018) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில் இவருக்கான விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

உலக மதம் தினம் முன்னிட்டு 32 ஆம் முறையும் இந்த நிகழ்வினை தேசிய சமாதான சங்கம் தலைமையில் பிரஜாதந்திரவாதி ஜனதா சம்மேலனய, ஜாத்தியந்தர சங்கலித வைந்திய வுர்த்திவேதிங்கே சங்கமய, இந்தியா சர்வதேச ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குருநாகல் மாவட்டத்தின், தேதிலி அங்க, இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஸக்கி லதீப் (M.D.M. Zacki Latheef) சர்வதேசத்தில் தனது கண்டு பிடிப்புக்கு தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட எமது நாட்டின் ஒரு இளம் கண்டுபிடிப்பாளராக மிளிர்கின்றார்.

தற்போது 23 வயதை தொட்டுள்ள இவர் தனது புத்தாக்க முயற்சியை தனது பதினாறாவது வயதில் தனது உயர்தர வகுப்பிற்கான தனிச் செயற்றிட்ட முயற்சியாக ஆரம்பித்தார். தனது கல்வியினை க.பொ.த சாதாரண தரம் வரை மடிகே முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர்தரத்தினை தேசிய பாடசாலை ஒன்றிலும், தற்போது College of health science தனியாள் மருத்துவ நிறுவனமொன்றில் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ மாணவனாக கல்வி பயின்றுவருகின்றார்.

இவரின் இவ்வெற்றியானது இலகுவான முறையில் கிடைக்கப்பெற்றது அல்ல. தனது இளம் வயது தொட்டு இன்றுவரை பல கஷ்டங்களையும், துன்பங்களையும், சவால்களையும் தனம்பிக்கையோடு எதிர்நோக்கி பெறப்பட்டதாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!